விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே.. இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிகிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியை புரிந்து கொள்ள நிறைய கேட்டு கொண்டே போகலாம்.
முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.. பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தை பற்றி அறிந்து கொள்வோம்..
