அழகுமுத்து அமரரானார்
சிந்திக்கத் தெரிந்த நாள் முதல் சிறந்த சிந்தனைகளை வளர்த்தெடுத்த ஐயா
அழகுமுத்து அவர்கள் 26.10.2018 அன்று காலை 8 மணியளவில் சிந்திப்பதை
நிரந்தரமாக நிறுத்திக்கொண்டு அமரரானார்.
இதுவரை அவர் சிந்தித்துப் படைத்த எழுத்துகள் இந்த வலைத் தளத்தில்
அவர் மறைந்தும், மறையாது சாகா வரம் பெற்று வாழும். புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும்.
அவர் சிந்தனைகள் நீடூழி வாழ்க!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேதாஜியின் தேசிய இராணுவத்தில் துடிப்போடு செயல்பட்டு இன்னும் தம் தேடலை உயிர்போடு நிகழ்த்திவரும் 92 வயது இளைஞரின் இணையதளம் இது. வாழ்வில் பல பரிமாணங்களை கடந்து வந்த இவர் தம் அனுபங்களை 20 நூல்களாக வடித்துள்ளார். அவை தன்வரலாறு, அறிவியல், புதினம், மருத்துவம் எனப் பல திறப்பட்டன.
நம் அண்மைய வரலாற்றையும் நேற்றைய வாழ்வியல் முறைகளையும் நேரடியாகச் சொல்லும் மனிதர்கள் பலரும் இன்று உயிரோடு இல்லை. இருப்பவர்களும் செயலிழந்துள்ளனர். ஆனால் இன்னும் நம்மோடு உரையாடவும், உறவாடவும் தயாராக உள்ள அழகுமுத்து அவர்களை இந்த அரிய இணையதளத்தின் வழி நீங்கள் சந்திக்கலாம்.